புதுச்சேரியில் முதல்வரை வழிமறித்து போராட்டம்.: பொதுப்பணித்துறை ஊழியர்கள் முற்றுகை

புதுச்சேரி: புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமியின் காரை முற்றுகையிட்டு பொதுப்பணி ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி உருளையன்பேட்டையில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து காரில் வந்த முதல்வர் நாராயணசாமியை பொதுப்பணித்துறை ஊழியர்கள் தீடிரென முற்றுகையிட்டனர்.

தங்களுக்கு 14 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்றும், 10 ஆண்டுகளாக பணியாற்றும் தங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. தங்களது கோரிக்கைகளை குறித்து முதலமைச்சரிடம் பேச ஊழியர்கள் போலீசாரிடம் அனுமதி கோரினர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி வழங்க மறுத்ததால் முதல்வரின் காரை அவர்கள் முற்றுகையிட்டனர். முற்றுகையிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: