ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற 1000 லிட்டர் டீசல் பறிமுதல்: லாரி டிரைவர் கைது

செய்யூர்: செய்யூர் அருகே உரிய ஆவணங்களின்றி லாரியில் எடுத்து சென்ற, 1000 லிட்டர் டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். செய்யூர் அருகே பவுஞ்சூர் அடுத்த நெல்வாய்பாளையம் அருகே நேற்று அணைக்கட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக திருக்கழுக்குன்றம் நோக்கி சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, லாரியில் ஆயிரம் லிட்டர் டீசல் இருப்பதும், அவை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படுவதும் தெரியவந்தது.

இதுகுறித்து லாரி ஓட்டுனரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கடப்பாக்கம் முதலியார்குப்பம் பகுதியை சேர்ந்த தேவேந்திரன் மகன் ரகுவரன் (32) என்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் மற்றும் உரிய பாதுகாப்பு இல்லாமல் எரிபொருள் எடுத்து சென்ற குற்றத்திற்காக போலீசார் ரகுவரனை கைது செய்து டீசல் கேன்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.  இது தொடர்பாக போலீசார் லாரி ஓட்டுனரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: