கொரோனா தொற்று அதிகம் பரவுவதால் பிள்ளையார்பாளையம் பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகராட்சி பிள்ளையார்பாளையம் பகுதி முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என கலெக்டா் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல், கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஊரடங்கு, சில தளர்வுகளுடன் தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் நகராட்சி, பிள்ளையார் பாளையம் பகுதியில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. இப்பகுதியில் இதுவரை 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள இப்பகுதியில் அதிகளவில் நெசவாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள், இதர பணியாளர்கள் என சுமார் 6800 குடும்பங்கள் வசிக்கின்றனர்.

அவர்கள், தங்களது பணி நிமித்தமாக தொடர்ந்து வெளியில் சென்று வருவதால், மாவட்டத்தின் பிற பகுதிகளில் நோய் தொற்று பரவவும், பிற பகுதிகளில் இருந்து இங்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் மொத்தம் உள்ள 5 வார்டுக்கு உட்பட்ட 15, 16, 17, 18, 19, 21 கொரோனா தொற்று பரவியுள்ளதால், முன்னதாகவே தெருக்கள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன. மேலும், மற்ற தெருக்களிலும் தொற்று பரவாமல் தடுக்கக 5 வார்டுக்கு உட்பட்ட அனைத்து (21 தெருக்கள்) தெருக்களையும் நேற்று அதிகாலை முதல் வரும் 26ம் தேதி இரவு 12 மணிவரை முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. 26ம் தேதி வரை இப்பகுதி மக்களுக்கு, வீடு வீடாக சென்று அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய காஞ்சிபுரம் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

Related Stories: