ஜூலை 22ம் தேதி நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை: மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

சென்னை: ஜூலை 22ம் தேதி நடைபெறவுள்ள வாகன உரிமையாளர்கள் போராட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று மாநில உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. டீசல் விலை உயர்வு, 15 ஆண்டுகளுக்கு முந்தைய வாகனங்களை செயல்பாட்டில் இருந்து நீக்குவது உள்ளிட்டவைகளை கண்டித்து லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் போராட்டம் அறிவித்துள்ளது. 22ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதுடன் கறுப்புக்கொடி போராட்டமும் நடைபெறும் என்று

அந்த சங்கம் கூறியுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் 135 கிளை சங்கங்களை கொண்ட மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் போராட்டத்தில் பங்கேற்கமாட்டோம் என்று அறிவித்துள்ளது. பொது முடக்க காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே லாரிகள் இயக்கப்படுவதால், போராட்டத்தில் பங்கேற்கமாட்டோம் என்று மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தங்களது கோரிக்கை  குறித்து மத்திய, மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இக்கட்டான காலகட்டத்தில் போராட்டத்தில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் அச்சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து, மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடவில்லை, இதனால் மக்கள் எந்தவித குழப்பமும் அடைய வேண்டாம் எனவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: