சென்னையில் போலியாக கால்சென்டர் நடத்திய கும்பலில் மேலும் 4 பேர் கைது!!!

சென்னை: சென்னையில் போலியாக கால்சென்டர் நடத்தி, பணம் பறித்த கும்பலை சேர்ந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கிகளில் கணக்கு வைத்துள்ள சாமானிய மக்களை குறிவைத்து கொள்ளையடிக்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் போலியாக கால்சென்டர் நடத்திய கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில், சிக்கிய சரவணன் மற்றும் செல்வகுமாரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தீவிர விசாரணை மேற்கொண்டதன்பேரில், மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், பெருங்குடி மற்றும் திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் கால்சென்டர் நடத்திய ஜகாத், ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். குறைந்த வட்டிக்கு கடன்வாங்கி தருவதாக கூறி சுமார் 400க்கும் மேற்பட்டோரிடம்  2 கோடி ரூபாய் வரை இந்த கும்பல் மோசடி செய்தது தற்போது தெரியவந்துள்ளது. இதில் குறிப்பாக பெண்களை பேசவைத்து, ஏராளமானோரை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது. இதனைத்தொடர்ந்து, கொரோனா சூழலை பயன்படுத்தி கடன்வாங்கி தருவதாக கூறும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: