ஏடிகே மோகன் பகான் புதிய ஜெர்சி அறிமுகம்

கொல்கத்தா: பிரபல கால்பந்து கிளப் அணிகளான மோகன் பகான் மற்றும் ஏடிகே இணைந்துள்ள நிலையில் புதிய லோகோ மற்றும் சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 130 ஆண்டுகளுக்கும் அதிகமான பாரம்பரிம் மிக்க மோகன் பகான் அணி, ஐஎஸ்எல் தொடரில் களமிறங்கும் அத்லெடிகோ டி கொல்கத்தா (ஏடிகே) கால்பந்து கிளப்புடன் இணைந்து புதிய கால்பந்து கிளப்பாக உருவாகி உள்ளது. ஏடிகே உரிமையாளர்கள் 80 சதவீத பங்குகளையும், மோகன் பகான் தரப்பில் 20 சதவீத பங்குகளையும் வைத்துள்ளனர். இந்த அணிக்கான லோகோ மற்றும் சீருடை அறிமுக விழா சமீபத்தில் நடந்தது. மோகன் பகான் அணியின் பாரம்பரியமான கருஞ்சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்கள் தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இது குறித்து, ஏடிகே மோகன் பகான் முதன்மை உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறுகையில், ‘மோகன் பகான் ரசிகர்களின் உணர்வுகள் மற்றும் ஆர்வம் மிக்க ஆதரவை மனதில் கொண்டு கருஞ்சிவப்பு மற்றும் பச்சை வண்ணம் கொண்ட ஜெர்சியை வடிவமைத்துள்ளோம். சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நாங்கள் பார்த்து வளர்ந்த, எங்கள் மனதுக்குப் பிடித்தமான அந்த வண்ணங்களை எப்படி மறக்க முடியும். ஐஎஸ்எல் மட்டுமல்ல மற்ற லீக் தொடர்களிலும் எங்கள் அணி நிச்சயம் விளையாடும்’ என்றார்.    

Related Stories: