சவுத்தாம்ப்டன்: வெ. இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இங்கி. அணி 2வது இன்னிங்சில் பொறுப்புடன் விளையாடி ரன் குவித்து வருகிறது. ரோஸ் பவுல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ரன்னுக்கு சுருண்டது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 43 ரன் எடுத்தார். எதிர் தரப்பு கேப்டன் ஹோல்டர் சிறப்பாகப் பந்துவீசி 6 விக்கெட்டும், கேப்ரியல் 4 விக்கெட்டும் கைப்பற்றினர். அடுத்து கள மிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், முதல் இன்னிங்சில் 318 ரன் குவித்து ஆல் அவுட்டானது.