விண்வெளியில் வெடித்து சிதறியது சீனாவின் அதிநவீன குவைசோவ் - 11 ராக்கெட்

பெய்ஜிங்: சீன விஞ்ஞானிகள் விண்ணில் ஏவிய அதிநவீன குவைசோவ் - 11 ராக்கெட் ஒரே நிமிடத்தில் வெடித்து சிதறிவிட்டது. சீன ராக்கெட் விண்ணில் வெடித்து சிதறியதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். குவைசோவ் - 1A என்ற சீனாவின் முந்தைய வெற்றிகரமான ராக்கெட்டை அடுத்து மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட புதிய ராக்கெட்டிற்கு குவைசோவ் - 11 என்று பெயர்சூட்டப்பட்டது.

இந்த ராக்கெட் இரண்டு செயற்கைகோள்களுடன் பெய்ஜிங் நேரப்படி 12: 17 மணிக்கு வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் ராக்கெட் தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் பயணத்தை தொடங்கிய ஒரு நிமிடத்தில் நிலை தடுமாறிய குவைசோவ் -11 ராக்கெட் அந்தரத்தில் அலைபாய்ந்து வெடித்து சிதறியது. குவைசோவ் - 11 2.2 மீட்டர் விட்டதையும், 700 டன் எடையையும் கொண்டது.

இந்த ராக்கெட் பூமியில் இருந்து 700 கிலோ மீட்டர் தூரத்தில் சூரியனின் சுற்றுப்பாதையில் 1000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை நிலைநிறுத்தும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது. புறப்பட்ட ஒரே நிமிடத்தில் ராக்கெட் வெடித்து சிதறியதற்கான காரணம் குறித்து ஜியுகுவான் விண்வெளி மையத்தின் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: