தேயிலை தோட்டத்தில் கரடி முகாம்: தொழிலாளர்கள் அச்சம்

மஞ்சூர்: மஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள கரடியால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் சமீபகாலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கரடிகள் அதிகளவில் காணப்படுகிறது. இரவு நேரங்களில் சுற்றுப்புற கிராமங்களில் உலா வரும் கரடிகள் அங்குள்ள கோயில்களின் கதவு, ஜன்னல்களை உடைத்து உள்ளே சென்று தீபம் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் எண்ணெய்யை குடிப்பதோடு பூஜை பொருட்களையும் சூறையாடி செல்வது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று மஞ்சூர் அருகே உள்ள ஓணிகண்டி பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் கரடி ஒன்று நடமாடியது.

இதை கண்டு தேயிலை பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சிலர் பீதி அடைந்து தேயிலை பறிப்பதை கைவிட்டு உடனடியாக தோட்டத்தில் இருந்து வெளியேறினார்கள். ஏற்கனவே இப்பகுதியில் உள்ள டீ கடையின் பின்புற பலகையை உடைத்து உள்ளே நுழைந்த கரடி அங்கிருந்த சர்க்கரை மற்றும் உணவு பொருட்களை நாசம் செய்து சென்றது. தற்போது மீண்டும் இப்பகுதியில் தேயிலை தோட்டங்களில் கரடி நடமாடுவதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Related Stories: