நெல்வேலி என்.எல்.சி.யில் அரசு அதிகாரிகளின் அலட்சியமே விபத்துக்கு காரணம்: எம்.எல்.ஏ சபா.ராஜேந்திரன் குற்றச்சாட்டு!!!

கடலூர்: கடலூர் மாவட்டம் நெல்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில், அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொள்ளாததே கொதிகலன்கள் வெடித்ததற்கு காரணம் என்று நெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.  நெல்வேலி  என்.எல்.சி. நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 3வது முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக மே மற்றும் ஜூலை மாதங்களில் ஏற்பட்ட பெரும் விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மாநில அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணம் என்று சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் கூறியுள்ளார்.

மேலும், முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுப்பணி மற்றும் தொழிலாளி நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து முறையான அறிக்கை அளித்திருந்தால், இதுபோன்ற விபத்துகள் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கடலூர் மாவட்டம் நெல்வேலி என்.எல்.சி. பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 2வது அனல்மின் நிலையத்தில் கடந்த ஒன்றாம் தேதி கொதிகலன்கள் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.

இந்த தீவிபத்தில் 6 தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 17 தொழிலாளர்கள் படுகாயமடைந்து சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் சிவகுமார் என்ற பொறியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் என்.எல்.சி. அனல்மின் நிலையத்தில் தொடர்ந்து தீவிபத்து ஏற்பட்டு பல தொழிலாளிகள் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் அதிகாரிகளின் அலட்சியமே என நெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: