திருப்பதி தேவஸ்தானத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் மீண்டும் பரிசோதனை

திருமலை: திருப்பதி தேவஸ்தானத்தில் பணியுரியும் 17 பேருக்கு கொரோனா தொற்றினால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால், அனைத்து ஊழியர்களுக்கும்  மீண்டும் பரிசோதனை செய்ய அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருமலை அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர்  குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில்  காணொளி காட்சி மூலம் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, அவர் பேசியதாவது: கடந்த 8ம் தேதி முதல் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் 12 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து  வருகின்றனர். திருப்பதி மலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படுகிறது.  

ஆனால், இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், தேவஸ்தானத்தில் பணிபுரியும்  அர்ச்சகர்கள், நாதஸ்வர வித்துவான்கள், விஜிலென்ஸ், ஊழியர்கள் உட்பட 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.  பக்தர்கள் மூலம் கொரோனா  பரவவில்லை. எனவே தேஸ்தான ஊழியர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். திருமலையில் பணிபுரியும் ஊழியர்களை 2  வாரங்களுக்கு ஒரேஇடத்தில் பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு 2 வாரங்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்படும்.   இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: