மீண்டும் ஒரு துயரம்!: மேட்டுப்பாளையத்தில் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த யானை பரிதாப பலி!!!

கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையத்தில் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு யானை உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உயிரிழந்துள்ள யானை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனசரகத்திற்கு உட்பட்ட திட்டிகுட்டை எனும் இடத்தில் உடல்நல குறைவால் காட்டுப் பகுதியில் விழுந்து கிடந்தது. இந்த தகவலை அறிந்த வனத்துறையினர் சில தினங்களாக யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இதற்கிடையில் யானை புத்துணர்ச்சி பெற்று மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து மறுபடியும் வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் யானை இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மேட்டுபாளையம் பகுதியில் கடந்த 2 நாட்களில் 3 யானைகள் உயிரிழந்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 13 யானைகள் உயிரிழந்துள்ளது.

துப்பாக்கியால் சுடுதல், உடல்நல குறைவு, உடல் உபாதை உள்ளிட்ட காரணங்களால் யானைகள் தொடர்ந்து உயிரிழக்க நேரிடுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் தனி குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். வனவிலங்குகள் உயிரிழப்பது மனிதர்களுக்கு ஆபத்து என்பதை அனைவரும் உணர வேண்டிய தருணமாக உள்ளது. கோவை மேட்டுப்பாளையம் சிறுமுகையில் அடுத்தடுத்து யானைகள் உயிரிழந்ததால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: