இரவு ரோந்துப்பணி காவலர்களை கண்காணிக்க கியூ.ஆர் கோட் செயலி உருவாக்கம்: ராணிப்பேட்டை காவல்துறை புதிய முயற்சி!!!

ராணிப்பேட்டை: தமிழகத்தில் முதல்முறையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை கண்காணிக்க கியூ.ஆர் கோட் செயலி தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பணியில் அதிக காவலர்கள் ஈடுபட்டுள்ளதால் 100 சதவீதம் இத்திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனம் தலைமையிலான குழுவினர் இணைந்து கியூ.ஆர் கோட் செயலி மூலமாக மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இரவு ரோந்துப்பணியில் ஈடுபடும் காவலர்களை 100 சதவீதம் கண்காணிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. காவல் துணை கண்காணிப்பாளர் அல்லது ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமை காவலர், காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடும் இவர்கள் குறிப்பிட்ட பகுதியில் வைக்கப்பட்டுள்ள பீட் புத்தகங்களை பதிவிடும் நடைமுறை பல காலமாக பின்பற்றப்பட்டு வந்தது. அந்த நடைமுறையில் மாற்றம் செய்து புதிய திட்டமாக இந்த செயலியை உருவாக்கியுள்ளனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 18 காவல் நிலையங்களை இரண்டு உட்கோட்டங்களாக பிரித்து ராணிப்பேட்டையில் 525 பாய்ண்டுகளும், அரக்கோணத்தில் 625 பாய்ண்டுகள் என மாவட்டத்தில் மொத்தம் 1150 பீட் பாய்ண்டுகள் கண்காணிக்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து, கொரோனா பணியில் அதிக காவலர்கள் ஈடுபட்டுள்ளதால் 100 சதவீதம் இத்திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என தெரிவித்திருக்கும் காவல் கண்காணிப்பாளர் இந்த செயலியில் பல்வேறு திட்டங்கள் செயல்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: