பழநி மலைக்கோயிலில் ரூ.72 கோடி மதிப்பில் 2வது ரோப்கார் பணிகள் மும்முரம்.! ஒரு மணிநேரத்தில் 1,500 பேர் பயணிக்கலாம்

பழநி: பழநி மலைக்கோயிலில் ரூ.72 ேகாடி மதிப்பில் 2வது ரோப்காருக்கான கட்டுமானப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குகிறது. பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்கு வசதியாக மேற்கு கிரிவீதியில் இருந்து 3 வின்ச்சுகள் இயக்கப்படுகின்றன. 2004ம் ஆண்டு தமிழகத்திலேயே முதன்முறையாக பழநி கோயிலில் ரோப்கார் அமைக்கப்பட்டது. இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ரோப்கார் இயங்க ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே அதன் முதலீட்டுத் தொகையான ரூ.4 கோடியை ஈட்டியது.

தற்போதுள்ள ரோப்காரின் பயண நேரம் 3 நிமிடமாகும். ஒரு மணிநேரத்தில் சுமார் 400 பேர் மட்டுமே பயணிக்க முடியும். இதனால் பக்தர்கள் ரோப்காரில் பயணிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவியது. கடந்த திமுக ஆட்சியில் 2வது ரோப்கார் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்பின் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. திமுக அறிவித்த திட்டம் என்பதால், அதிமுக அரசு இதனை கிடப்பில் போட்டது.பழநி திமுக எம்எல்ஏ செந்தில்குமார் இத்திட்டத்தை துவக்க சட்டமன்றத்தில் பலமுறை வலியுறுத்தினார். இதன் எதிரொலியாக இத்திட்டம் தற்போது துவங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு செய்துள்ள சென்னையைச் சேர்ந்த நிறுவனத்தின் மூலம் இப்பணிகள் நடந்து வருகிறது.

சுமார் ரூ.72 கோடியில் நவீன முறையில் அமையவிருக்கும் 2வது ரோப்காரில், ஒரு மணிநேரத்தில் ஆயிரத்து 500 பேருக்கு மேல் பயணிக்கலாம்.

தற்போது கீழ்தளத்தில் கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. பிரான்ஸ் நாட்டில் இருந்து ரோப்கார் இயந்திரங்கள் வரவழைக்கப்பட உள்ளன. கொரோனா காலம் முடிவடைந்தவுடன் பணிகளை தீவிரப்படுத்த கோயில் நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள்

வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: