ராஜ்நாத் லடாக் பயணம் திடீர் ரத்து

புதுடெல்லி: லடாக் எல்லையில் இந்தியா - சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதை தணிப்பதற்காக இருநாடும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால், பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி பகுதிகளில் சீன ராணுவம்  வீரர்களை குவித்து வருகிறது. இந்நிலையில், லடாக் எல்லை நிலவரம், ராணுவ தயார்நிலையை பார்வையிடுவதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், ராணுவ தளபதி நரவானேவும் இன்று லடாக் செல்வதாக இருந்தனர். ஆனால், இந்த பயணம் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது. அதற்கான காரணத்தை பாதுகாப்பு அமைச்சகமும், ராணுவமும் வெளியிடவில்லை.

Related Stories: