நீலகிரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 107 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 37 பேர் சிகிச்சைப்பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஊட்டியின் கிரீன்பீல்ட்ஸ் பகுதியில் வசித்த 65 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் நபர் என தெரிய வந்துள்ளது. அதேபோல், திருவாரூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இதனால், மாவட்டத்தில் உயிரிழந்த நபர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு  மாவட்டங்களில் ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,264 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் வருகின்ற ஜூலை மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: