ஸ்டாக் வச்சு ஒவ்வொன்னா வெளியிடுறாங்களா....? மனித குலத்தை அழிக்கக் கூடிய அடுத்த சீன வைரஸ் கண்டுபிடிப்பு: பன்றிகள் மூலம் பரவக்கூடியவை

பீஜிங்: கொரோனா பாதிப்பிலிருந்து உலகம் விடுபட முடியாமல் தவிக்கும் நிலையில், மனித உயிருக்கு அச்சுறுத்தலான அடுத்த வைரசை சீனா கண்டுபிடித்துள்ளது. இது பன்றிகளில் இருந்து பரவிய ஸ்வைன் ப்ளூவின் புதிய வகையாகும்.

சீன அரசின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், கடந்த 20011 முதல் 2018ம் ஆண்டு வரை பன்றிகளிடம் நடத்திய ஆராய்ச்சிகளின் முடிவு குறித்து பிஎன்ஏஎஸ் மருத்துவ இதழில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த 2016ல் பன்றிகளில் இருந்து பரவிய ஸ்வைன் ப்ளூ வைரசின் ஜி4 மரபணுவைச் சேர்ந்த, ‘எச்1என்1 வைரஸ்’ போன்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்வைன் ஃப்ளு வைரஸே மரபியல் ரீதியில் மாற்றம் பெற்று வலிமையான G4 வைரசாக உருமாற்றம் பெற்றிருக்கிறது.

இதற்கு ஜி4 இஏ எச்1என்1 வைரஸ் என ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர். இந்த வைரஸ், 2016ம் ஆண்டு ஸ்வைன் ஃப்ளு  ஏற்படுத்திய தாக்கத்தை விடவும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். உலகளவில் பல நாடுகளுக்கு  பரவும் தன்மை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது சுவாச மண்டலத்தின் வெளிப்புற அடுக்குகளில் எளிதில் பலமடங்கு பெருகும் தன்மை வாய்ந்தது.

காற்று மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பரவும். மூக்கு ஒழுகுதல், சளி, இருமல், தும்மல் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தி, உடல் எடையில் 7.3 % முதல் 9.8% இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளனர். இந்த வைரஸ், கொரோனா தொற்று போல உலகப் பெருந்தொற்றாக மாறும் அச்சுறுத்தல் உள்ளது. இது புதுவிதமான வைரஸ் என்பதால் மனிதர்களுக்கு இதனை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு திறன் இருக்காது. இப்போது வரை இதனால் ஆபத்து ஏதும் இல்லை. ஆனால், இதனை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, பன்றி வளர்ப்பு துறையில் உள்ளவர்களை கூடுதல் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.

Related Stories: