கிராமப்புற வழிபாட்டுத்தலங்களில் செய்ய வேண்டிய நெறிமுறைகளை கட்டுப்பாடுகளுடன் வெளியிட்டுள்ளது தமிழக அரசு

சென்னை: கிராமப்புற வழிபாட்டுத்தலங்களில் செய்ய வேண்டிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் கோயிலுக்கு வருபவர்களை அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. கோயிலுக்கு வருபவர்களிடம் ஆரோக்கிய சேது செயலியை தரவிறக்கம் செய்ய அறிவுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அன்னதானக் கூடங்களிலும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க சேண்டும் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. கோயில்களில் பிரசாதம், தீர்த்தம், அங்கப்பிரதேசம் போன்றவைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கிழே விழுந்து வணங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

65 வயதை கடந்த முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரித்துள்ளது. கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜூலை 6-ம் தேதிக்கு மேல் கிராமப்புறங்களில் உள்ள கோயில்களை திறக்கலாம் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் ஆண்டு வருமானம் ரூ.10,000-க்கு கீழ் உள்ள கோயில்கள் மட்டுமே திறக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Related Stories: