இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஒரு காவல் நிலையம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.: ஒய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி வேதனை

திருவனந்தபுரம்: இந்திய வரலாற்றில் ஒரு காவல் நிலையத்தை வருவாய்த்துறை அதிகாரிகளிடத்தில் நீதிமன்றம் ஒப்படைத்துள்ளது இதுவே முதல்முறை என்று ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் வழக்கு விசாரணை தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு சென்ற கோவில்பட்டி நீதிபதியை, காவல்துறை அதிகாரி ஒருவர் விரட்டி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிதிபதிக்கே இந்த நிலை என்றால் சாமானியர்களின் நிலை என்னவாவது என்கிற கேள்வி மக்களிடத்தில் எழுந்துள்ளது. இந்தநிலையில் இரு வியாபாரிகள் உயிரிழந்த வழக்கில் காவல்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு தராத காரணத்தினால் மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு கேரள மாநில முன்னாள் டி.ஜி.பியா பணியாற்றிய என்.சி. அஸ்தானா கருத்து தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் காவல் நிலையம் தான் இந்திய வரலாற்றிலேயே வருவாய்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட முதல் காவல் நிலையம் ஆகும். இந்தியாவில் காவல்துறை சட்டம் 1861- ம் ஆண்டு அமலுக்கு வந்த பிறகு இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு காவல் நிலையத்தை வருவாய்த்துறை அதிகாரிகளிடத்தில் நீதிமன்றம் ஒப்படைத்துள்ளது.  மூத்த அதிகாரிகள் மீது கூட நம்பிக்கை இல்லையா? என்ன ஒரு அவமதிப்பான சம்பவம் இது என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

Related Stories: