செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் திடீர் ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு  மதுரையில் இருந்து சென்னைக்கு சென்ற சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீரென, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டுக்கு சென்றார். அங்கிருந்த டீன் சாந்திமலர் மற்றும் டாக்டர்களிடம், நோயாளிகளின் நோய்தொற்று குறித்து விசாரித்தார்.சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் சிகிச்சையளிக்கும் டாக்டர்கள், செவிலியர்களிடமும் செல்போன் மூலம் சிகிச்சை மற்றும் பராமரிப்பு குறித்தும் கேட்டறிந்தார்.

சுமார் ஒரு மணிநேரம் ஆய்வுக்கு பின், சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.இது குறித்து டீன் சாந்திமலர் குறுகையில், சென்னை புறநகர் பகுதியான செங்கல்பட்டில் கொரோனா தொற்று காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பலர் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னை செல்லும் வழியில் நள்ளிரவில் வந்த அமைச்சர் பணியில் இருந்த எங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினார்.மருத்துவமனைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார். அமைச்சரின் இந்த திடீர் விசிட் எங்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது என்றார்.

Related Stories: