தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம், இருமத்தூர், மாட்லாம்பட்டி, அரியகுளம், கம்பைநல்லூர், பாலக்கோடு, காரிமங்கலம், இண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில், விவசாயிகள் வெண்டைக்காய் பயிரிடுகின்றனர். விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் வெண்டைக்காய், தர்மபுரி மார்க்கெட் மற்றும் கேரளாவிற்கும், பெங்களூருக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. நடப்பாண்டில் வெண்டைக்காய் நல்ல விளைச்சல் தந்துள்ளது.
கடந்த சில நாட்களாக அதிகபட்சமாக சில்லரை விலையில் கூட, கிலோ ரூ8 முதல் ரூ10 வரை விற்பனை செய்யப்படுகிறது.