பஜாஜ் மோட்டார் வாகனத் தொழிற்சாலையில் ஊழியர்கள் 140 பேருக்கு கொரோனா

அவுரங்கபாத்: பஜாஜ் மோட்டார் வாகனத் தொழிற்சாலையில் ஊழியர்கள் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தின் அவுரங்காபாத்தில் உள்ள பஜாஜ் மோட்டார் வாகனத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் 140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் இருவர் உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,90,401-லிருந்து 5,08,953-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,301-லிருந்து 15,685-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,85,637-லிருந்து 2,95,881-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 384 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 18,552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இதன் காரணமாக இம்மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கையானது 1.50 லட்சத்தை தாண்டியுள்ளது.

இதனையடுத்து மகாராஷ்டிரத்தின் அவுரங்காபாத்தில் உள்ள பஜாஜ் மோட்டார் வாகனத் தொழிற்சாலையில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 140 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஊழியர்களில் இருவர் உயிரிழந்ததாகவும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: