மத்திய அரசுக்கு செல்லூர் ராஜூ எதிர்ப்பு

மதுரை: மதுரையில் அமைச்சர்  செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தலைமை கூட்டுறவு  வங்கி, 47 கிளைகளுடன் உள்ளது. 23 மாவட்ட வங்கிகளும், அதனுடைய 881 கிளைகளும்  உள்ளன.  ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலுடன் இதனை நடத்துகிறோம். நிர்வாகக்குழுவை, மக்கள் பிரதிநிதிகளே தேர்ந்தெடுக்கின்றனர்.  எந்த  ஒரு நடவடிக்கையாக இருந்தாலும் ரிசர்வ் வங்கியைக் கேட்டுத்தான் நடக்க  வேண்டும் என்ற நிலையில், நம்முடைய வணிகம் பாதிக்கும். இதனை துவக்கத்திலேயே  தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைவரும் எதிர்த்தோம். பதிவாளரின் கட்டுப்பாட்டில்  இருக்கும் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு  வர மத்திய அரசு முயற்சிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: