மெக்சிகோவில் நிலநடுக்கம்

மெக்சிகோ: மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மெக்சிகோவில் பசிபிக் கடலோர மாநிலமான ஓக்சாகாவில் உள்ள சாண்டமரியா என்ற நகரை மையமாக கொண்டு நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளது. இது தென் மேற்கு மெக்சிகோவின் கடலோர பகுதியை மையமாக கொண்டு 12 கி.மீ. ஆழத்தில் உருவாகி உள்ளது. மேலும்,  அருகில் உள்ள கவுதமாலா, மத்திய மெக்சிகோ பகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹுவதுல்கோ பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள்,  வீடுகள், சுவர் இடிந்து விழுந்தன. இதில் அரசு நிறுவனமான பெமெக்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பணி புரியும் ஊழியர் ஒருவர் உள்பட 5 பேர் பலியாகினர். இது குறித்து இந்நாட்டின் அதிபர் ஆண்ட்ரே மானுவேல் லோபஸ் ஓப்ரடார் கூறுகையில், ``ஹூவதுல்கோ பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகி உள்ளார். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். பல இடங்களில் சுவர்களும், ஜன்னல்களும் இடிந்து விழுந்துள்ளன. நிலநடுக்கத்தை தொடர்ந்து, 140 முறை சிறிய அதிர்வுகள் உணரப்பட்டன’’ என்று தெரிவித்தார்.

Related Stories: