அறிகுறியுள்ள எல்லோருக்கும் பரிசோதனை நடத்த வேண்டும்: ஐசிஎம்ஆர் வலியுறுத்தல்

புதுடெல்லி: கொரோனா அறிகுறியுள்ள அனைவருக்கும் பரிசோதனை நடத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கொரோனா நோய் தொற்று குறித்த புதிய வழிகாட்டுதல்களை முன்வைத்துள்ளது. இது குறித்து கூறியிருப்பதாவது: கொரோனா அறிகுறியுள்ளவர்களுக்கான பரிசோதனையை விரிவுபடுத்த வேண்டும். பரிசோதனை, தடமறிதல் மற்றும் சிகிச்சை என்பது மட்டுமே நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கும் உயிர்களை காப்பாற்றுவதற்கான ஒரே வழியாகும். எனவே, நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் அறிகுறி உள்ளவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு வலியுறுத்துவது அவசிமாகிறது. நோய் தொற்று உடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல் என்பது நோய் பரவலைக்கட்டுப்படுத்துவதை மேலும் வலுப்படுத்தும்.

மருத்துவமனைகள், கட்டுப்பாட்டு பகுதிகள், சிவப்பு எச்சரிக்கை பகுதிகள், கொரோனா தொற்று உள்ளவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பயணம் மேற்கொண்டவர்களுக்கு மட்டுமே தற்போது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  ஆனால், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை பிரிவுகளை சார்ந்த நிறுவனங்களுக்கு விரைவான ஆன்டிபாடி பரிசோதனையை நடத்தப்படவேண்டும். அனைத்து மருத்துவமனைகள், ஆய்வகங்கள் மற்றும் மாநில அரசுகள் ஆன்டிஜென் சோதனைகளை செய்வதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் பதிவு செய்வது அவசியமாகும்.

Related Stories: