ஏழுமலையான் கோயிலில் ரூ.57 லட்சம் காணிக்கை

திருமலை: கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் தவிர மற்ற சில மாநிலங்களில் உள்ள கோயில்களில் குறைந்த எண்ணிக்கையில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதேபோல் உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று காலை 6 மணி முதல் இரவு 8.20 மணி வரை மொத்தம் 9,301 பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சென்று தரிசனம் செய்தனர். நேற்று 2,119 ஆண்கள், 80 பெண் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியிருந்தனர். நேற்றுமுன்தினம் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்று மாலை நடந்தது. அதில் ரூ.57 லட்சம் காணிக்கை இருந்தது.

Related Stories: