50 ஆண்டுகளின் மிகச்சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் இல்லை..இவர் தான்!

மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், முந்தைய லிட்டில் மாஸ்டர் சுனில் கவாஸ்கர் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி ராகுல் திராவிட் கடந்த 50 ஆண்டுகளின் மிகச்சிறந்த இந்திய வீரர் என்று விஸ்டன் இந்தியா கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

மொத்த வாக்குகளில் ராகுல் திராவிட் 52% பெற்ற  முதலிடம் பிடித்தார், சச்சின் டெண்டுல்கர் 48% வாக்குகளுடன் 2ம் இடத்தை பிடித்தார். முறையே சுனில் கவாஸ்கர் 3ம் இடத்தை பிடித்தார்.100 சதங்களை அடித்த சச்சின் டெண்டுல்கரைக் காட்டிலும் ராகுல் திராவிட் ஆகச்சிறந்த பேட்ஸ்மெனாக தேர்வாகி இருக்கிறார்.

மொத்தம் 11,400 ரசிகர்கள் இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றனர். இதில் மதியம் வரை ராகுல் திராவிட் பின் தங்கியிருந்தார். ஆனால் டெஸ்ட்டில் மெதுவாக தொடங்கி ஆடிக்கொண்டே இருப்பது போல் இவருக்கான வாக்குகளும் மெதுவே அதிகரிக்க சச்சின் டெண்டுல்கரை முந்தினார்.

சுனில் கவாஸ்கர் 3ம் இடத்திலும், விராட் கோலி 4ம் இடத்தையும் பிடித்தனர். 3ம் 4ம் இடத்துக்கான போட்டியில் கவாஸ்கர் கோலியை முந்தி 3ம் இடத்தைப் பிடித்தார்.சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,921 ரன்களையும் திராவிட் 13,288 ரன்களையும் எடுத்துள்ளனர். கவாஸ்கர் 10,122 ரன்களை 125 டெஸ்ட் போட்டிகளில் எடுத்துள்ளார்.

2004-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் டெஸ்ட்டில் திராவிட் முதல் இன்னிங்சில் 233 ரன்களையும் 2வது இன்னிங்ஸில் 78 ரன்களையும் எடுக்க இந்திய அணி கங்குலி தலைமையில் பிரமாதமான டெஸ்ட் வெற்றியை ஆஸி.மண்ணில் நிகழ்த்திக் காட்டியது. தொடரையும் நாம் சமன் செய்தோம்.

Related Stories: