மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ தமோனஷ் கோஷ் கொரோனாவுக்கு உயிரிப்பு,..மம்தா பானர்ஜி இரங்கல்

கொல்கத்தா: மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ தமோனஷ் கோஷ் (60) கொரோனாவுக்கு உயிரிழந்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் தமோனஷ் கோஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமோனஷ் கோஷ் மறைவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்தார். எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷ் கடந்த மாதம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டார்.

தமோனாஷ் கோசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷ் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வேறு சில உடல் நல பிரச்சனைகள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமோனாஷ் கோஷ் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பால்டா சட்டசபை தொகுதியில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  

மம்தா பானர்ஜிஇரங்கல்:

தமோனாஷ் கோசின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது என்று  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுடன் இருந்தார் என்றும் அவர் அர்ப்பணிப்புடன் கட்சி மற்றும் மக்கள் பணியாற்றினார் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் அனைவரின் சார்பாக அவரது மனைவி ஜர்னா, அவரது இரண்டு மகள்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என மம்தா கூறியுள்ளார்.

Related Stories: