ஜம்மு: ஜம்முவில் நடந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் சமீபகாலமாக தீவிரவாதிகள் வேட்டையை ராணுவம் தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்த மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பந்த்சோ பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.