எல்லையில் ஊடுருவ தீவிரவாதிகள் திட்டமா?; காஷ்மீரில் உளவு பார்த்த பாகிஸ்தானின் ட்ரோன் விமானம் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, கடந்த வருடம் ஆகஸ்ட் 5-ம் தேதி அதை லடாக், ஜம்மு காஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதனையடுத்து, இந்திய எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவ முயற்சிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காஷ்மீரின் பூஞ்ச் உள்ளிட்ட பகுதியில் அத்துமீறல் சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது. அத்துடன் பயங்கரவாத ஆதரவாளர்களை தூண்டிவிட்டு எல்லைப்பகுதியில் அமைதியை சீர்குலைக்கலாம் எனவும் பாகிஸ்தான் திட்டமிட்டது.

ஆனால், பாகிஸ்தானை ஊடுருவ முடியாத வகையில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் நேற்று மட்டும் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டுதான் வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உளவு பார்த்த பாகிஸ்தானின் ட்ரோன் விமானம் எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இன்று காலை 5.10 மணிக்கு பறந்த போது சுட்டுவீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் லடாக் சீனா எல்லை பிரச்னை நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் உளவு பார்த்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இந்த நிகழ்வானது மத்திய அரசுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

விமானப்படை தளபதி பேட்டி:

இதற்கிடையே, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த விமானப்படை தளபதி பதாரியா, வான்வெளியில் பிற நாடுகளின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். பிற நாடுகளின் செயல்பாடுகள் முழுவதும் ஆய்வு செய்து அதற்கு தேவையான எதிர்விளையாற்ற நாம் தயாராக இருக்கிறோம். மேலும் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: