கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு 4 இடங்களில் நடக்கிறது.: குழந்தையின் எலும்புக்கூடு முதன் முறையாக கண்டெடுப்பு

கீழடி: கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் குழந்தையின் முழு அளவிலான எலும்புக்கூடு முதன்  முறையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு கொந்தகை, மணலூர், அகரம் மற்றும் கீழடி உள்ளிட்ட நான்கு இடங்களில் நடைபெற்று வருகிறது. ரூ. 40 லட்சம் செலவில் கடந்த பிப்ரவரி 19 தேதி முதல் இந்த அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொந்தகையில் இன்று காலை நடந்த அகழாய்வின் போது ஒரு குழந்தையின் எலும்புக்கூடு  முழு அளவில் கிடைத்துள்ளது.

முதுமக்கள் தாழிகள் மூன்று நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் நிலை என்பது பராமரிக்க முடியாத முதியோர்களை உணவு, தண்ணீர் வைத்து அப்படியே புதைப்பது என்றும். இரண்டாம் நிலை என்பது வேறு இடத்தில் அடக்கம் செய்தவர்களின் எலும்புகளை தோண்டியெடுத்து தாழியினுள் வைத்து புதைப்பது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கொந்தகையில் இரண்டாம் நிலை தாழிகள் அதிக அளவில் கிடைத்து வருகிறது.

Related Stories: