அமைச்சர் கே.பி.அன்பழகன் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற வர வேண்டும்.: ஸ்டாலின் ட்வீட்

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் கே.பி.அன்பழகன் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற வர வேண்டும். மேலும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகனுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மனப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், கே.பி.அன்பழகன், காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாண்டியராஜன் ஆகிய 6 அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.   

மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனையில் பங்கேற்றிருந்தார். கே.பி.அன்பழகனுடன் ஜெயகுமார், காமராஜ் உள்ளிட்ட அமைச்சர்களும் ஆலோசனையில் பங்கேற்றிருந்தனர். இந்த அமைச்சர்கள் கடந்த சில நாட்களாக வடசென்னை மற்றும் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் முகாமிட்டு தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் அமைச்சர் கே.பி.அன்பழகனின் டிரைவர் விவேகானந்தனுக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் அன்பழகன் டிரைவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அமைச்சரும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார். திடீரென அவருக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் மியாட் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது.

Related Stories: