ஊர் பெயர்களை மாற்றிய தமிழக அரசாணை வாபஸ்

சென்னை: தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவது தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட அரசாணை வாபஸ் பெறப்படுவதாக அமைச்சர் மாபா.பாண்டியராஜன் அறிவித்தார்.  தமிழ் ஒலி வடிவங்களுக்கேற்ப ஆங்கிலத்தில் எழுத்து மாற்றம் செய்யப்பட்டு 1018 ஊர்களின் பெயர்களை மாற்றம் செய்ய அரசு முடிவு செய்து ஆணை பிறப்பித்தது.

இந்நிலையில், இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. ஊர்களின் பெயர்கள் முறையாக உச்சரிப்பு மாற்றம் செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.  இதைதொடர்ந்து இந்த அரசாணையை திரும்ப பெறுவதாக அமைச்சர் மாபா.பாண்டியராஜன் அறிவித்துள்ளார். ஆங்கில உச்சரிப்பு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த 3 நாட்களில் புதிய அரசாணை வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: