ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருவேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அவந்திப்புரா அருகே  உள்ள மீஜ் கிராமத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சோபியான் மாவட்டம் முனந்த் கிராமத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  பாகாப்புப்படை நடத்திய தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலை அறிந்த பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்

அப்போது பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் ஒரு தீவிரவாதி முதலில் சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் 2 தீவிரவாதிகள் மசூதிக்குள் பதுங்கினர். பாதுகாப்பு படையினர் மசூதியை சுற்றி வளைத்தனர். இன்று அதிகாலையில் மசூதிக்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் தீவிரவாதிகள் வெளியேறினர். இதையடுத்து அவர்கள் இருவரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். தீவிரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.  இதனால், கடந்த 24 மணி நேரத்தில் 8 தீவிரவாதிகள்  சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது. இந்த மோதலில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினருக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றன.

Related Stories: