கொரோனா தடுப்பு நடவடிக்கையை தமிழகம் முழுவதும் கவனித்த பீலா ராஜேஷ் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளரானார்

சென்னை:  தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்க தமிழகத்தில் 33 மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதன்படி அரியலூர் மாவட்டத்துக்கு கனிமவளத்துறை இயக்குனர் இ.சரவணவேல் ராஜ், பெரம்பலூர்-அனில் மேஷ்ராம்(மாநில திட்ட கமிஷன் உறுப்பினர் செயலர்), கோவை- ஹர்மந்தர் சிங்(நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர்), நீலகிரி-சுப்ரியா சாஹூ(தமிழ்நாடு சிறு தேயிலை வளர்ப்போர், தொழிற் கூட்டுறவு மற்றும் தேயிலை தொழிற்சாலை கூட்டமைப்பு மேலாண்மை இயக்குனர்), கடலூர்- ககன்தீப் சிங் பேடி(வேளாண்மை துறை செயலாளர்),.

தர்மபுரி-சந்தோஷ் பாபு(கைவினை மேம்பாட்டு கழகம் தலைவர்), திண்டுக்கல்- மங்கத்ராம் சர்மா(ஆவணக் காப்பகங்கள் ஆணையர்), ஈரோடு- காகர்லா உஷா(தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழக செயலாளர்), கன்னியாகுமரி-பி.ஜோதி நிர்மலா சாமி(பத்திரப்பதிவு துறை ஐஜி), கரூர்- விஜயராஜ் குமார் (மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர்), திருச்சி- ரீட்டா ஹரிஷ் தாக்கர்(சர்க்கரை துறை ஆணையர்), கிருஷ்ணகிரி- பீலா ராஜேஷ்(வணிக வரி, பத்திரப்பதிவுத்துறை செயலாளர்). மதுரை- தர்மேந்திர பிரதாப் யாதவ்( போக்குவரத்து துறை செயலாளர்), புதுக்கோட்டை-ஷம்பு கல்லோலிகர்( கைத்தறி, கைத்திறன், துணிநூல் (மற்றும்) கதர்த்துறை செயலாளர்), தஞ்சாவூர்-பிரதீப் யாதவ்( சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர்).

நாமக்கல்- தயானந்த் கட்டாரியா(கூடுதல் தலைமை செயலாளர்), சேலம்- நசிமுதீன்(தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர்), விருதுநகர்-மதுமதி(சமூக நலத்துறை செயலாளர்), தூத்துக்குடி- குமார் ஜெயந்த்( வெளிநாட்டு வேலை வாய்ப்புத் துறை நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர்), நாகப்பட்டினம்- முனியநாதன்(ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர்), ராமநாதபுரம்-பி.சந்திரமோகன்(பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர்). சிவகங்கை-மகேஷன் காசிராஜன்( தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர்), திருவாரூர்-கே.மணிவாசன்((பொதுப் பணி துறை செயலாளர்), தேனி-ஏ.கார்த்திக்(நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை), திருவண்ணாமலை- தீரஜ் குமார்(பள்ளிக்கல்வித்துறை செயலாளர்), திருநெல்வேலி- செல்வி அபூர்வா( உயர்கல்வித்துறை செயலாளர்), திருப்பூர்- கோபால்(கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலாளர்).

வேலூர்- ராஜேஷ் லக்கானி(வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர்), விழுப்புரம்- என்.முருகானந்தம்(தொழில்துறை செயலாளர்), கள்ளக்குறிச்சி- எஸ்.நாகராஜன் (தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக நிறுவன இயக்குனர்), தென்காசி-அனு ஜார்ஜ்(தொழில் மற்றும் வர்த்தகம் ஆணையர்), திருப்பத்தூர்- வஹர் (போக்குவரத்துதுறை ஆணையர்), ராணிப்பேட்டை- லட்சுமி பிரியா( வணிகவரித்துறை கூடுதல் ஆணையர்) ஆகியோர் .

நியமிக்கப்பட்டுள்ளனர்.  முன்னாள் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், வணிக வரித்துறை செயலாளராக மாற்றப்பட்டார். அவர் சுகாதாரத்துறையில் சிறப்பாக செயல்படவில்லை என்பதற்காக மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. இப்போதுகிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை செயலாளராக இருந்தபோது அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள், பொறுப்பு அதிகாரிகள் அனைவரும் பீலாவின் கட்டுப்பாட்டில் இருந்தனர். தற்போது அவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தை மட்டும் கவனிப்பார். இனி அவர் தற்போதைய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் அறிவுரைப்படி செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: