இந்திய ஹோட்டல்களில் சைனீஸ் உணவுகள் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள்!!

டெல்லி :  இந்திய ஹோட்டல்களில் சீன உணவுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக லடாக் விவகாரத்தில் போருக்கு தயாராக இருங்கள் என சீன ராணுவத்தினருக்கு அந்த நாட்டு அதிபர் ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்ற செய்திகள் உலா வந்த வண்ணம் இருந்தனர்.

அதற்கேற்றாற் போலவே, போரின் முன்னோட்டமாக, எல்லையில் இந்தியா ராணுவத்தினர் மீது சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மோதலால் தற்போது இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும், இரு நாட்டு தலைவர்களும் மாறிமாறி, எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய சமூக நீதித்துறை இளைய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, நாடு முழுவதும் ஹோட்டல்களில் சைனீஸ் உணவு வகைகளான பிரைடு ரைஸ், நூடுல்ஸ், உள்ளிட்டவைகளை விற்க தடை விதிக்க வேண்டும் என்றும், பொதுமக்களும் சைனீஸ் உணவு வகைகளை புறக்கணிக்க முன் வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவுக்கு பதிலடி தரும் வகையில் மக்கள் இதனை கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: