கொரோனா தடுப்பு பணியில் இருக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காவிட்டால் கிரிமினல் குற்ற தண்டனை வழங்கப்படும்

* உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் இருக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்காவிட்டால், கிரிமினல் குற்றத்துக்கான தண்டனை வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம்  அதிரடியாக கூறியுள்ளது. கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் புதிய பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கொரோனா நோய் தொற்று பாதிப்பு விவகாரத்தில் நோயாளிகளை காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் இரவு, பகல் என்று பாராமல், தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர். ஆனால் இவ்வாறு பணி செய்யும் அவர்களுக்கு ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது.

இவர்களின் நலனை மத்திய மாநில அரசுகள் கருத்தில் கொண்டதாக தெரியவில்லை. அதனால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு ஒரு வழிகாட்டு கொண்ட உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நிலுவையில் இருக்கும் ஊதியத்தை உடனே வழங்க அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு ஆணைப் பிறப்பிக்க வேண்டும்.

மேலும், அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உரிய வசதிகளை செய்து தர வேண்டும். இதுபோன்ற வசதிகளை மருத்துவர்களுக்கு செய்து தர அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு ஆணையிட வேண்டும். மருத்துவப் பணியில் இருக்கு அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காவிட்டால் அது கிரிமினல் குற்றமாக கருதி, அதுகுறித்த நடவடிக்கைகள் எடுத்து தண்டனை வழங்கப்படும் என உத்தரவில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: