ஒலிம்பிக் தினத்தையொட்டி கட்டுரை, வீடியோ போட்டி: சென்னை ஹாக்கி சங்கம் ஏற்பாடு

சென்னை: சென்னை ஹாக்கி சங்கம் சார்பில் ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு யு-14 சிறுவர், சிறுமியருக்கு கட்டுரை, வீடியோ போட்டி நடத்தப்படுகிறது. இது குறித்து சென்னை ஹாக்கி சங்கத்தின் தலைவர் ஒலிம்பியன் வி.பாஸ்கரன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஹாக்கி திறனை மேம்படுத்தவும், ஒலிம்பிக் குறித்து அறிந்துகொள்ளவும் வசதியாக ‘ஒலிம்பிக் தினத்தை’ முன்னிட்டு கட்டுரை, வீடியோ போட்டியை நடத்த உள்ளோம். இதில்  14வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் பங்கேற்கலாம். கட்டுரை பிரிவில் ‘ஒலிம்பிக்’ குறி்த்து 100 வார்த்தைகளில்  ஒரு கட்டுரையை எழுத வேண்டும். வீடியோ பிரிவில் யு14பிரிவினர் ஹாக்கித் திறனை வெளிப்படுத்தும் வகையில், ‘ஹாக்கி மட்டை, பந்துடன் விளையாடி’ 2நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை அனுப்பலாம்.

ஜூன் 23ம் தேதிக்குள் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். வீடியோவில் தங்கள் திறமைகளை அனுப்புபவர்கள், களத்தில் உள்ளது போன்ற சீருடை, காலணியுடன் வீட்டுக்கருகில் உள்ள இடங்களில் பதிவு செய்தால் போதுமானது. மைதானங்களுக்கு செல்ல வேண்டாம். கட்டுரைகள் சொந்த கையெழுத்தில் இருக்க வேண்டும். அச்சிட்டு அனுப்பக் கூடாது. பெயர், பிறந்த தேதி, தொலைபேசி எண் ஆகியவற்றை  94442 71202, 94445 64138, 79042 30872 என்ற எண்களுக்கு வாட்ஸ்ஆப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல்  3 இடங்களை பிடிப்பவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Related Stories: