எல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி!!

பெய்ஜிங் : இந்தியாவுடன் மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில், எல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகையில் ஈடுபட்டு இருப்பது இரு நாடுகள் இடையே உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா ஆளுகைக்குட்பட்ட திபெத்தின் தெற்கு பகுதியில் உள்ள டாங்குலா என்ற இடத்தில் இந்த போர் பயிற்சி நடைபெற்றதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பயிற்சியில் ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சீன ராணுவத்தின் இந்த திடீர் நடவடிக்கை இரு நாட்டு எல்லையில், போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. 1962ம் ஆண்டு இதே போன்ற நிகழ்வுகள் தான், இந்தியா - சீனா இடையே முழு அளவிலான போருக்கு வித்திட்டதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். லடாக்கில் சீன ராணுவம் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சீன தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ள அந்நாட்டு ஊடகம், எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை.

Related Stories: