லடாக் பகுதியில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்கள் யார்...யார்?: பெயர் பட்டியலை வெளியிட்டது இந்திய ராணுவம்!

டெல்லி: லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20 வீரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் பட்டியலை இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. அதன்படி ஹவில்தார் பழனி, சட்னம் சிங், மன்தீப் சிங், குந்தன் குமார், அமன் குமார், நாயக் தீபக் சிங், சந்தன் குமார், கணேஷ் ஹஸ்தா, கணேஷ் ராம், கே.கே.ஓஜா, ராஜேஷ் ஓரோன், சி.கே. பிரதான், ராம்சோரன், கர்னல் சந்தோஷ்பாபு, சுனில்குமார், ஜெய் கிஷோர் சிங், பிபுல்ராய், குர்தேஜ் சிங், அங்குஷ், குர்வீந்தர் சிங் ஆகியோர் வீர மரணமடைந்துள்ளனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி என்பவர் பெயரும் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து, வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் விவரங்களை வெளியிட கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சீன ராணுவத்தை பொறுத்தவரை இதுவரை எத்தனை வீரர்கள் உயிரிழந்தார்கள்? எத்தனை வீரர்கள் காயமடைந்தார்கள்? உள்ளிட்ட எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்திய ராணுவத்தை பொறுத்தவரை முழு பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

மோதலில் வீர மரணம் அடைந்தவர்களின் மிகவும் முக்கியமானவர்கள் கர்னல், சந்தோஷ் பாபு, இவர்தான் எல்லை பகுதியில் இந்திய கமண்டராக இருந்தவர். தொடர்ந்து, 20 வீரர்களின் பட்டியலில் தமிழக ராணுவ வீரரான ஹவில்தார் கே.பழனியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்தியா- சீனா 3,488 கிமீ தூர எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதில் பல இடங்களில் இரு நாட்டு எல்லை சரியாக நிர்ணயிக்கப்படாததால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், சுமார் 6 வாரங்களாக லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீனா  ராணுவத்தினர் இடையே மீண்டும் பயங்கர கைகலப்பு ஏற்பட்டது. இதில் இரு நாட்டு வீரர்களும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக இந்திய தரப்பில் முதல் கட்டமாக 3 வீரர்களும் அதன்பின் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 17 வீரர்களும் வீரமரணம் அடைந்தனர் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் முதலில் வீரமரணம் அடைந்தவர்களின் பெயர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டது.

Related Stories: