சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரிசி அட்டைதாரர்களுக்கு தலா 1000 நிவாரணம்

* 22ம்தேதி முதல் வீடுகளில் விநியோகம்

* முதல்வர் அறிவிப்பு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வருகிற 19ம் தேதி (வெள்ளி) முதல் 30ம் தேதி இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு, பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூந்தமல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய  அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட மாங்காடு  மற்றும் குன்றத்தூர் பேரூராட்சி, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இங்கு வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 நிவாரணம் வழங்க உத்தரவிட்டிருந்தேன்.  அதன்படி வரும் 22ம் தேதி (திங்கள்) முதல் சம்பந்தப்பட்ட துறையினர் அரிசி குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று,ரொக்கமாக நிவாரணத்தை வழங்கஉத்தரவிட்டுள்ளேன்.

நடைமுறை என்ன?

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் சஜ்ஜன்சிங் ரா சாவன் 4 மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற 22ம் தேதி முதல் நிவாரணம் 1000 வழங்க ஆரம்பித்து 26ம் தேிக்குள் முடிக்க வேண்டும். ஜூன் மாதத்தில் அத்தியாவசிய பொருள் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு 27, 29 ஆகிய நாட்களில் விநியோகம் செய்யப்பட வேண்டும். நிவாரணத்தொகை விற்பனை முனைய இயந்திரம் மூலமாக, இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்பட வேண்டும்.

Related Stories: