ஆபாச இணையதளங்களில் மூழ்கி கிடக்கும் சிறுவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வாசலில் நிர்வாணமாக வந்து நின்ற நடிகர், நடிகை: நியூசிலாந்து அரசு நூதன விளம்பரம்

வெலிங்டன்: ஆபாச இணையதளங்களில் மூழ்கி கிடக்கும் சிறுவர்களை மீட்க, வாசலில் நிர்வாணமாக நடிகர், நடிகை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நியூசிலாந்து அரசு நூதன விளம்பரம் செய்து வருகிறது. இணைய தளங்களில் ஆபாச படங்களை பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பெரியவர்கள் மட்டுமில்லாமல் சிறுவர்களும் இந்த ஆபாச படங்களை பார்க்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. கையில் ஸ்மார்ட் போன்கள் இருந்தால் போதும் இதுபோன்ற ஆபாச படங்களை பார்க்க பல இணையதளங்கள் உள்ளன. குறிப்பாக சிறுவர்கள் ஆபாச படங்களை பார்க்கும் எண்ணிக்கை அதிகரித்து வருவதை எண்ணி வருந்திய இங்கிலாந்து அரசு, அதைக் கட்டுப்படுத்த புதிய சட்டத்தை இயற்றியுள்ளது.

அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் ஆபாச படங்களை இணையதளங்களில் பார்க்கும் விதமாக, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்கள் அதன் எண்ணை கொடுத்து குறிப்பிட்ட ஆபாச இணையதளங்களில் படம் பார்க்கும் வகையில் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல நாடுகள் தங்கள் நாட்டின் சிறுவர்கள் ஆபாச படங்களை பார்த்து சீரழிவதை தடுக்க பல வழிகளை கையாண்டு வருகின்றன. அந்த வகையில் நியூசிலாந்து நாட்டின் அரசு, அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் நூதன பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இதன்மூலம் ஆபாச இணையதளங்களில் மூழ்கி கிடக்கும் சிறுவர்களை மீட்க முடியும் என்றும், பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்கவும் வலியுறுத்தி உள்ளது.

சுமார் ஒரு நிமிடம் ஓடும் அந்த வீடியோ விளம்பரத்தில், ஆபாச படங்களில் நடிக்கும் நடிகர் சூ மற்றும் நடிகை டெரெக்கின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட வீட்டிற்கு நிர்வாணமாக நடந்து செல்கின்றனர்.

வீட்டின் கதவின் முன்பு நிற்கின்றனர். அப்போது, அந்த வீட்டில் உள்ள பெண் தனது கையில் ‘காஃபி’ கப்புடன் கதவை திறக்கிறார். சிரித்த முகத்துடன் எதிரே ஒரு ஆணும், பெண்ணும் நிர்வாணமாக பார்ப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார். அப்போது அந்த நடிகரும், நடிகையும், ‘ஹாய்… உங்கள் மகன் எங்களை ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருக்கிறார்’ என்கின்றனர். அதிர்ச்சியடைந்த அந்த பெண், அதே இடத்தில் நின்று கொண்டு வீட்டினுள் இருக்கும் தனது மகனை பார்க்கிறார். அந்த சிறுவன் தனது ஒரு கையில் உள்ள லேப்டாப் மற்றும் மற்றொரு கையில் உள்ள ‘காஃபி’ கப்புடன் உடனே வாசல் நோக்கி எழுந்து வருகிறான். அப்போது, நிர்வாணமாக நிற்கும் நடிகை, நடிகரை பார்த்து திகைத்து, கையில் இருந்த ‘காஃபி’ கப்பை கீழே விட்டுவிடுகிறான்.

அப்போது நடிகர் சூ கூறுகையில், ‘நாங்கள் வழக்கமாக பெரியவர்களுக்காகவே ஆபாச படங்களில் நடிக்கிறோம். ஆனால் உங்கள் மகன்  ஒரு சிறுவன். பெற்றோராகிய நீங்கள்தான் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்’ என்கிறார்.

தொடர்ந்து நடிகை டெரெக்கின், ‘ஆமாம், நிஜ வாழ்க்கையில் நாங்கள் ஒருபோதும் ‘அப்படி’ செயல்படமாட்டோம். வயதுவந்தோர் பார்க்க வேண்டிய ஒன்றை சிறுவர்கள் பார்ப்பதால், அவர்களின் எதிர்காலம் சிதைய வாய்ப்புள்ளது’ என்றார். அதன்பின்னர், நடிகை, நடிகரின் அறிவுரையை கேட்ட அந்த பெண், தன் மகனிடம் ஆபாச படங்களை பார்ப்பதை தவிர்த்து அன்பை பகிர்ந்து கொள்வோம் என்று, தனது மகனிடம் பேசுகிறார். இத்துடன் அந்த வீடியோ கிளிப் விளம்பரம் முடிந்துவிடுகிறது.

கடந்த டிசம்பர் 2019ல் நியூசிலாந்து அரசு, இளம் வயதினர் பாலியல் பற்றி அறிய அவர்கள் முதன்மை கருவியாக இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். நாட்டில் பார்க்கப்படும் மிகவும் பிரபலமான ஆபாசக் கிளிப்களில் மூன்றில் ஒரு பங்கால், இணைய அச்சுறுத்தல், வன்முறை, மன அழுத்தம் போன்றவை ஏற்படுவதாக அறிக்கையை வெளியிட்டது. நியூசிலாந்து அரசு விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிட நகைச்சுவையைப் பயன்படுத்தி விளம்பரப்படுத்துவது இது முதல் தடவை அல்ல. ஏற்கனவே போதையில் வாகனம் ஓட்டுபவருக்காக, ஒரு கார் விபத்துக்குப் பிறகு அந்த நபருடன் ஒரு பேய் பேசுவது போலவும், அது அவரை பிடித்து இழுத்து செல்வது போலவும் காமெடியாக விளம்பரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: