ஹைட்ராக்ஸி குளோரோகுயின்-க்கு வழங்கிய அங்கீகாரத்தை ரத்து செய்த அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத் துறை : மருந்தின் அருமை தெரியவில்லை என ட்ரம்ப் சாடல்

வாஷிங்டன்:  கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் அளிப்பதை அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ரத்து செய்துள்ள நிலையில், இந்த மருந்தின் அருமை அமெரிக்க சுகாதார நிறுவனங்களுக்கு தெரியவில்லை என அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார். கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு வழங்கப்பட்ட அவசர அங்கீகாரத்தை அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ரத்து செய்துள்ளது.

பல்வேறு ஆய்வுகளில் இருந்து கிடைத்த முடிவுகளின் படி, இந்த மருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான பயனையும் அளிக்கவில்லை என்றும், நோய்த்தொற்றின் கால அளவையோ அல்லது மரண அபாயத்தையோ குறைக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.இதனால் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க வழங்கக்கூடாது என்று தெரிவித்துள்ள உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, மற்ற வழக்கமான பயன்பாட்டிற்கு தடையில்லை என்று தெரிவித்துள்ளது.

இதே முடிவுக்கு வந்துள்ள பிரிட்டன விஞ்ஞானிகள், கொரோனாவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் ஹைட்ராக்சி குளோரோகுயினுக்கு ஆதரவாக பேசி வரும் டிரம்ப், தாமும் அந்த மருந்தை எடுத்துக் கொண்டதில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

Related Stories: