வங்கி நுழைவாயிலில் இருந்த தானியங்கி கண்ணாடிக் கதவின் இடுக்கில் சிக்கிய பெண் பலி : கண் இமைக்கும் நேரத்தில் கேரளாவில் சோகம்!!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கண்ணாடியை கவனிக்காமல் கதவில் மோதிய இளம் பெண், ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாவூரில் உள்ள தனியார் வங்கிக்கு வீனா என்ற இளம்பெண், பணம் எடுப்பதற்காக சென்றார். வங்கிக்கு உள்ளே சென்ற அவர், தாம் மறந்து வைத்துவிட்டு வந்த இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுக்க வேகமாக வெளியே சென்றார். அப்போது வாசலில் தானியங்கி கண்ணாடி கதவு இருப்பது தெரியாமல், வெற்றிடம் என நினைத்து, வேகமாக தாண்டிய போது, அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் அலறிய சத்தம் கேட்டு அருகில் இருந்தவர், உதவிக்கு வர முனைந்தனர். ஆனால் அதற்குள் அப்பெண்மணி உடைந்து சிதறிய கண்ணாடி துண்டுகளின் மேல் நிலைகுலைந்து விழுந்துவிட்டார்.

பின்னர் எழுந்து நின்று சகஜமாகினார். ஆனால் அதன் பின்னர்தான் கண்ணாடிக் கதவு தன்னை வெட்டியுள்ளதை கீழே இருந்த ரத்தத் துளிகளை பார்த்து அறிந்துகொண்டார். ஆனால்,10 நிமிடத்தில் வீணா மயக்கம் அடைந்தார். வங்கியில் இருந்த பிற வாடிக்கையாளர்கள் வீனாவிற்கு ஏற்பட்ட காயம் சாதாரணமானது என நினைத்தாலும் 5 நிமிடங்களில்  மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.ஆனால் வீனா வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சோக விபத்திற்கு வங்கியின் வாயில் கண்ணாடி கதவு மிகவும் மெலிதாக இருந்ததே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. 

Related Stories: