கொரோனாவில் மத்திய, மாநில அரசு தோல்வியை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று எதிர்ப்பு தினம் இயக்கம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

சென்னை: “கொரோனாவில் மத்திய, மாநில அரசுகளின் தோல்வியை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று எதிர்ப்பு தினம் இயக்கம் நடத்தப்படும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகளின் தோல்வியை கண்டித்தும், மக்கள் எதிர்கொள்ளும் துயரங்களை கருத்தில் கொண்டும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹7500 ரொக்கம், 10 கிலோ உணவு தானியம் விநியோகம், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் 200 நாட்களுக்கு வேலை, பொது சுகாதாரம்-மருத்துவ பணிகளை பலப்படுத்துவது,வருமானம் இழப்பு,  விவசாயம் -  தொழில்கள் மற்றும் மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்னை உள்ளிட்ட தற்போதைய பிரதான அம்சங்களை முன்னிறுத்தி, ஜூன்16ம்தேதி(இன்று )அகில இந்திய எதிர்ப்பு தின இயக்கத்தை பரவலாக நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமுடிவுசெய்துள்ளது.

இதன் அடிப்படையில், தமிழகத்தில் கொரோனா அதிகமுள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் தவிர்த்து இதர மாவட்டங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான மையங்களில் நடைபெற உள்ள இந்த  ஆர்ப்பாட்டத்தின் போது முகக்கவசம், தனி நபர் இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றிடவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: