சென்னம்பட்டி வனப்பகுதியில் ஆண் யானை பலி

அந்தியூர்: ஈரோடு அந்தியூர் அடுத்துள்ள சென்னம்பட்டி வனசரகத்தில் வனவர் மாரியப்பன்  வேட்டை தடுப்பு காவலர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டர். அப்போது குருப்பனூர் வனப்பகுதியில் ஒரு ஆண் யானை இறந்து கிடந்தது. இதையடுத்து சென்னம்பட்டி வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி வன அலுவலர் ராமகிருஷ்ணன், வனச்சரகர் செங்கோட்டையன், கால்நடை மருத்துவர் அசோகன் மற்றும் குழுவினர் யானை இறந்து கிடந்த பகுதிக்கு சென்று பிரேத பரிசோதனை செய்தனர். இதில் வயது முதிர்ச்சி காரணமாக ஆண் யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. மேலும் இறந்த யானையின் மூன்று அடி நீளமுள்ள இரண்டு தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. இரண்டு தந்தங்கள் சென்னம்பட்டி வனச்சரக அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது.

Related Stories: