கொல்கத்தா : டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை குப்பைத் தொட்டியில் வீசியது போலவே, மேற்குவங்கத்திலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்குவங்கத்தில், தெற்கு கொல்கத்தாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துப்போன 13 சடலங்கள் தகனத்துக்காக, கயிறு கட்டி தரதரவென்று இழுத்துச் சென்று அமரர் வாகனத்தில் ஏற்றப்பட்டது. அப்போது துர்நாற்றம் வீசியதை அடுத்து உள்ளூர்வாசிகள் தகன வாயிலுக்கு பூட்டுப் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனை ஒருவர் வீடியோ எடுத்ததை அடுத்து, இது குறித்து பேசிய கவர்னர் ஜகதீப் தங்கர், “இறந்து போன மனித சடலங்களை இப்படி இழிவாக நடத்தியது மனிகுலத்தை வெட்கப்படச் செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.