மனித இனத்தை புரட்டிப் போட்டுள்ள நுண்ணுயிர் கிருமி: கொரோனா போரில் ஈடுபடுபவர்களுக்காக வழிபாடு நடத்தும் கொரோனா தேவி ஆலயம்!!

திருவனந்தபுரம் :  கொரோனா போரில் ஈடுபடுபவர்களுக்காக வழிபாடு நடத்த கேரளாவில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. ஒட்டு மொத்த மனித இனத்தையே புறப்பட்டு இருக்கிறது இந்த கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர் கிருமி. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வல்லரசு நாடுகளே கொரோனா வைரசுக்கு நடுங்கி வருகின்றன. பணக்காரன் முதல் ஏழை வரைவேறுபாடு இன்றி  அனைவருக்கும் கொரோனா ஒரு அச்சமாக மாறி உள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் கொல்லம் நகரில் இருந்து 44 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடக்கல் என்ற இடத்தில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது.இந்த ஆலயத்தை அணிலன் என்பவர் கட்டி உள்ளார். கொரோனா வைரஸ் தோற்றத்தை சிலையாக நிறுவி அதற்கு பூஜை செய்து வருகிறார்.இந்த ஆலயம் சுகாதாரப் பணியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் உள்ளிட்ட கொரோனா வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.  தெர்மோகால் மூலம் தயாரிக்கப்பட்டு, ‘பல்லிவல்’ மீது அமர்ந்திருக்கும் கொரோனா தேவி எந்த ‘மூலமந்திரமும்’ இல்லாத தெய்வம் ஆகும். கேரளாவில், பெரியம்மை நோய்க்கான தெய்வம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கோயில் குறித்து அணிலன் கூறுகையில், 33 கோடி இந்து கடவுள்களுடன் கூடுதலாக மேலும் ஒரு கடவுள்.தொற்றுநோய்க்கு எதிரான போரில் ஈடுபடும் அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் தெய்வத்தின் முன் பூஜைகளை நடத்துவேன்.இது யாரையும் கேலி செய்யும் முயற்சி அல்ல, அனைத்து பூஜைகளும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்யப்படும். இந்து புராணங்களின்படி, கடவுள் எங்கும் நிறைந்தவர், வைரஸில் கூட இருக்கிறார். ஒரு வைரஸை தேவி என்று வணங்குவது எங்களுக்கு ஒரு புதிய வழக்கம் அல்ல.தரிசனம் இல்லை என்றாலும், கொரோனா தேவியின் பிரசாதம் பக்தர்களுக்கு அஞ்சல் மூலம் கிடைக்கும், என்றார்.

Related Stories: