அந்தமான் அருகே மத்திய கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது : வானிலை ஆய்வு மையம்

சென்னை : அந்தமான் அருகே மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகவே 3 நாட்களுக்கு மத்திய மேற்கு வங்கக்கடல், ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு  உள்ளதாகவும், தென்மேற்கு பருவமழை, வெப்பச்சலனத்தால் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறும். மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: