திண்டுக்கல்லில் சமூக இடைவெளி இல்லாமல் லாரியில் பயணம்.:கல்லூரி மாணவர்களை வேலைக்கு பயன்படுத்தும் நிறுவனங்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூர் அருகே தனியார் அச்சக வேலைக்காக கல்லூரி மாணவர்களை கன்டெய்னர் லாரிகளில் மறைத்து அழைத்து சென்றபோது சோதனை சாவடியில் சிக்கிக்கொண்டனர். கல்வார்பட்டி சோதனை சாவடியில் கன்டெய்னர் லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது கல்லூரி மாணவர்கள் 13 பேர் இருந்ததை கண்டுபிடித்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரித்த போது கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் இருக்கும் மாணவர்களை அச்சகத்தில் பணியாற்ற அழைத்து சென்றது தெரியவந்துள்ளது. சமூக இடைவெளி இல்லாமல், எந்த ஒரு அனுமதியும் பெறாமல் மாணவர்களை அழைத்து சென்றதை கண்டுபிடித்த போலீசார் அவர்களை கண்டித்து சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர். தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக கல்லூரி மாணவர்களை வேலைக்கு பயன்படுத்துவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: